பல்லவி
ஸ்ரீ காமாக்ஷீ காவவே நனு கருணா கடாக்ஷி
1ஸ்ரீ காந்திமதீ ஸ்ரீ காஞ்சீ புர வாஸினி
அனுபல்லவி
ஏ(கா)ம்(ரே)ஸ்1வரீ நீகு ஏலாகு3 த3ய வச்சுனோ
லோகுலு கோரின தை3வமு நீவே கா3தா3
ஏக பா4வுடை3ன நன்(னொ)கனி ப்3ரோவ ப3ருவா (ஸ்ரீ)
சரணம்
சரணம் 1
கோரி வச்சின ப4க்த ஜனுலகு
கோம(ளா)ங்கீ3 நீவே ஸாம்ராஜ்யமு
காமா(க்ஷ)ம்மா நின்னே வேடி3ன பி3ட்3ட3னு
காபா(ட3வ)ம்மா கருண ஜூ(ட3வ)ம்மா
ஸாரஸ த3ள நேத்ரீ 2காம பாலினீ
ஸோம ஸே1க2ருனி ராணீ புராணீ
ஸ்1யாம(ளா)ம்பி3கே காளிகே 3கலே
ஸாம கா3ன மோதி3னீ ஜனனீ (ஸ்ரீ)
ஸ்வர ஸாஹித்ய
நா மனவி வினு(மி)க கி3ரி
தனயா முத3முதோ வச்சி கோரிதி
நா வெதலனு தீ3ர்சவே மா(க)ப4ய
தா3ன(மீ)யவே தாமஸமு ஸேயகனே (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ காமாக்ஷீ/ காவவே/ நனு/ கருணா/ கடாக்ஷி/
ஸ்ரீ/ காமாட்சீ/ காப்பாயம்மா/ என்னை/ கருணை/ கடைக்கண்ணீ/
ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புர/ வாஸினி/
ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புரத்தினில்/ உறைபவளே/
அனுபல்லவி
ஏக-ஆம்ர-ஈஸ்1வரீ/ நீகு/ ஏலாகு3/ த3ய/ வச்சுனோ/
ஏகாம்பரேசுவரீ/ உனக்கு/ எங்ஙனம்/ தயை/ வருமோ/
லோகுலு/ கோரின/ தை3வமு/ நீவே/ கா3தா3/
மக்கள்/ வேண்டும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/
ஏக/ பா4வுடை3ன/ நன்னு/-ஒகனி/ ப்3ரோவ/ ப3ருவா/ (ஸ்ரீ)
ஓர்/ எண்ணத்தினனாகிய/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/
சரணம்
சரணம் 1
கோரி/ வச்சின/ ப4க்த ஜனுலகு/
கோரி/ வந்த/ அடியார்களுக்கு,
கோமள/-அங்கீ3/ நீவே/ ஸாம்ராஜ்யமு/
கோமள/ அங்கத்தினளே/ நீயே/ பேரரசாகும்/
காமாக்ஷி/-அம்மா/ நின்னே/ வேடி3ன/ பி3ட்3ட3னு/
காமாட்சி/ யம்மா/ உன்னையே/ வேண்டிய/ குழந்தையாம் (நான்)/
காபாடு3/-அம்மா/ கருண/ ஜூடு3/-அம்மா/
காப்பாய்/ அம்மா/ கருணை/ புரிவாய்/ அம்மா/
ஸாரஸ/ த3ள/ நேத்ரீ/ காம/ பாலினீ/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மன்மதனை/ காத்தவளே/
ஸோம/ ஸே1க2ருனி/ ராணீ/ புராணீ/
பிறை/ யணிவோனின்/ ராணியே/ பழம் பொருளே/
ஸ்1யாமளா/-அம்பி3கே/ காளிகே/ கலே/
சியாமளா/ அம்பிகையே/ காளிகையே/ கலையே/
ஸாம/ கா3ன/ மோதி3னீ/ ஜனனீ/ (ஸ்ரீ)
சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/ ஈன்றவளே/
ஸ்வர ஸாஹித்ய
நா/ மனவி/ வினுமு/-இக/ கி3ரி/
எனது/ வேண்டுகொளினை/ கேளாய்/ இனி/ மலை/
தனயா/ முத3முதோ/ வச்சி/ கோரிதி/
மகளே/ மகிழ்வுடன்/ வந்து/ வேண்டினேன்/
நா/ வெதலனு/ தீ3ர்சவே/ மாகு/-அப4ய/
எனது/ வேதனைகளை/ தீர்ப்பாயம்மா/ எமக்கு/ அபய/
தா3னமு/-ஈயவே/ தாமஸமு/ ஸேயகனே/ (ஸ்ரீ)
தானம்/ தருவாயம்மா/ தாமதம்/ செய்யாமலே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸ்தி2ரமனி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'திரமான' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ்தி2ரமைன' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.
5 - ஸ1ரணண்டின - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'சரணடைந்த' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ1ரணனின' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.
6 - நிரீக்ஷணமு சேய - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'புறக்கணிப்பு செய்ய' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈக்ஷண' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'நோக்குதல்' என்று பொருளாகும். இச்சொல்லுடன், 'நிர்' என்ற prefix-இனை சேர்த்து, 'நோக்காதிருத்தல்' என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கலாம். பொதுவாக, சம்ஸ்கிருதத்தில், 'நிர்' என்ற prefix, அந்த சொல்லினை, எதிர்மறையாக்கும். ஆனால், 'ஈக்ஷண' என்ற சொல்லுடன், 'நிர்' கூட்டி, 'நிரீக்ஷண' என்றாலும், 'நோக்குதல்' என்றே பொருளாகும். இவ்விடத்தில், 'புறக்கணித்தல்' என்பதற்கு, சில சொற்களாவன - 'நிரீஹத', 'நிர்-லக்ஷ்ய' (அலக்ஷ்ய), 'உபேக்ஷ' ஆகும்.
7 - நீ நாம த்4யானமே - நீ நாமமே த்4யானமே.
Top
மேற்கோள்கள்
1 - ஸ்ரீ காந்திமதீ - திருநெல்வேலியில், அம்மையின் பெயர். இப்பாடல், காஞ்சீபுரத்திலுள்ள 'காமாட்சி'யை நோக்கி பாடப்பட்டுள்ளதால், 'காந்திமதீ' என்ற சொல்லுக்கு 'பேரொளியினள்' என்று பொருளாகும்.
2 - காம பாலினீ - மன்மதனைக் காத்தவள். சிவன், மன்மதளை எரித்து சாம்பலாக்கிய பின்னர், காமாட்சி, அவனை, உடலின்றி உயிர்ப்பித்ததாகக் கூறப்படும். இது குறித்து, 'ஸௌந்தர்ய லஹரி' (6-வது செய்யுள்) நோக்கவும்.
3 - கலே - கலையே - 'கலை வடிவினளே' என. லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மையின் பெயர் 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (226) (64 கலை வடிவினள்) ஆகும். '64 கலைகள்' பற்றிய விவரம்.
Top
விளக்கம்
ஏகாம்பரேசுவரீ - காஞ்சி ஏகாம்பரேசுவரரின் இல்லாள்
ஓர் எண்ணத்தினன் - அம்மையைத் தவிர வேறு எண்ணமற்றவன்
பிறை யணிவோன் - சிவன்
Top